Sunday, November 10, 2013

நிறுவப்பட்டு இருக்கும் மென்பொருள்களை வேறு Drive க்கு மாற்ற


SymMover , programs , installed , another drive
C Drive இல் இருந்து நேரடியாக வேறு Drive க்கு மாற்ற ஒரு வசதி இருந்தால் எப்படி அதுபற்றி தான் இந்த பதிவு   கணினியில் நிறைய மென்பொருள்களை பயன்படுத்தும் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை, C Drive – இல் மிக அதிகமான Software -களை இன்ஸ்டால் செய்துவிட்டு அது Full ஆனவுடன் என்ன செய்வது என்று திகைப்பது. இதனால் கணினி மெதுவாக இயங்க தொடங்கும். குறிப்பிட்ட Software – ஐ uninstall செய்துவிட்டு மீண்டும் வேறு டிரைவில் install செய்வார்கள் பலர். இம்மென்பொருள் மூலம் அந்த பிரச்சனையை தீர்க்க முடிகிறது .
 
இதை Windows Vista மற்றும் Windows 7 பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். முதலில் SymMover என்ற இலவச மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். எத்தனை மென்பொருட்களை Move செய்ய வேண்டுமோ அத்தனையையும் தெரிவு செய்து . ஒவ்வொன்றாகத்தான் மாற்ற முடியும்

புதிய Drive ல் மாற்றிய பின்ன எந்த மாற்றமும் இன்றி பயன்படுத்தலாம் என்பது சிறப்பம்சம்

தரவிறக்க சுட்டி

புதிய இலவச மென் பொருட்களை ஒரே இடத்தில் இருந்து நிறுவ


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6TccdLM4Kztk6rrdwzgxHyPPOBRZk3G_6PssAUiaCSSYHoT-hujD98hqflXJKUsdcpbaleylxvRikHzWqMLTI6ZykNbY3GY_InmaBnN_h-4k8aJNIaOkaVe6Wkf6IAnfykfNIfS_4qZiE/s320/%25E0%25AE%2587%25E0%25AE%25B2%25E0%25AE%25B5%25E0%25AE%259A.gif
சாதாரன இலவச மென்பொருள் தறவிரக்க விரும்பினால் கூகிளில்
சென்று தேடி ஒவ்வொரு மென்பொருளாகத்தான் தறவிரக்க வேண்டும்
ஆனால் நமக்கு பயன்படும் அனைத்து இலவச மென்பொருட்களையும்
அங்கீகாரத்துடன் ஒரே இடத்தில் இருந்து எளிதாக நம் கணினியில்
நிறுவலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

புதிதாக அறிமுகமாகிக்கொண்டிருக்கும் அனைத்து பீரிவேர் ( Freeware)
அப்ளிகேசன் பற்றிய தகவல்களும் , எத்தனை பேர் இந்தப்புதிய
மென்பொருளை பயன்படுத்தியுள்ளனர் எப்படி இருக்கிறது என்று
பயன்படுத்திய மக்களின் பின்னோட்டத்துடன் நாம் எளிதாக
அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இலவச மென்பொருட்களை கொடுக்க பல இணையதளம் இருந்தாலும்
சில நேரங்களில் இவ்வாறான தளங்களில் சென்று தறவிரக்கும் போது
Adware என்று சொல்லக்கூடிய தொல்லைகள் நம் கணினியில ஊடுறுவ வாய்ப்பிருக்கிறது. இதற்காக மென்பொருள் உருவாக்கும்
நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று தறவிரக்கலாம் அல்லது
இதே போல் நம்பிக்கையாக இருக்கும் தளத்தில் இருந்து இலவச
மென்பொருட்களை எளிதாக தேடி தறவிரக்கலாம். ஆனால் இந்தத்
தளத்தின் மூலம் நேரடியாக குறிப்பிட்ட மென்பொருள் உருவாக்கும்
இணையதளத்திற்கே இணைப்பு கொடுத்து நேரடியாக Install செய்யலாம்.

புதிதாக வெளிவரும் மென்பொருட்களையும் பழைய மென்பொருளின்
புதிய அப்டேசனை தறவிரக்க விரும்பும் அனைவருக்கும் இந்ததளம்
பயனுள்ளதாக இருக்கும்.

நமக்கு பிடித்த URL க்கு Quick Response Code உருவாக்குவது எப்படி ?


பல இடங்களில் நீங்கள் பாத்திருப்பிர்கள் இதனை எப்படி நம்முடைய இணையத்தளத்துக்கோ அல்லது  பேஸ்புக் கணக்குக்கோ உருவாக்கலாம்


 QR கோடு என்பது (Quick Response Code) , பார் கோடின் அடுத்த தலைமுறை என்றுதான் கூற வேண்டும். இந்த கோடானது மேட்ரிக்ஸ் பார்மெட்டில் உருவாக்கப்படுகிறது. இந்த QR கோட்டினை மேட்ரிக்ஸ் பார்கோடு என்றும் டு டைமன்ஸ்னல் பார்கோடு என்றும் கூறுவர். இந்த QR கோடு பெரும்பாலும் இணைய முகவரி, முகவரி, போன் நம்பர் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற்றை இந்த QR கோட்டில் செய்திகளை சுருக்கமாக உள்ளடத்து வைத்து பின் இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

QR கோடு ஸ்கேனர்கள் பெரும்பாலும் தற்போது ஸ்மார்ட் போன்களில் பரவலாக காணப்படுகிறது. விண்டோஸ் இயங்குதளத்திற்கும் QR கோடு ஸ்கேனர்கள் உள்ளது.

நம்முடைய வலைபூ, வலைமனை, முகவரி, தொலைபேசி எண் மற்றும் கூப்பன்களுக்கு எளிதாக QR கோடினை உருவாக்க முடியும். இதனை இணையத்தின் உதவியுடன் ஆன்லைனிலேயே உருவாக்க முடியும். 
இதை  உருவாக்க கூடிய  இணையத்தளங்கள் கீழே ...
இணையத்தளங்கள்

பயோடேட்டாவை உருவாக்க ஒரு இணையத்தளம்


இத்தளத்திற்கு சென்று  நாம் பயோடேட்டா உருவாக்க ஆரம்பிக்கலாம். நம் பெயர், முகவரி, கல்வித்தகுதி, தகுதிகள் என ஒவ்வொன்றாக கேட்டு வேலை செய்ய விரும்பும் துறைகள் வரை அனைத்தையும் கேட்ட பின் நம் பயோடேட்டாவை எப்படி கொடுத்தால் சிறப்பாக இருக்குமோ அப்படி கொடுக்கிறது. 
பல்வேறு வகையான பயோடேட்டாவின் மாடல்கள் இங்கு இருக்கிறது இதில் எது வேண்டுமோ அதை நாம் ஒரே சொடுக்கில் தேர்ந்த்தெடுத்துக் கொள்ள்லாம்.

மேலதிகாரிகளின் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என்று அழகாக வகைப்படுத்தி கண்ணால் பார்பதற்கு அழகாகவும் சிறப்பாகவும் பயோடேட்டா உருவாக்கி கொடுக்கிறது.

எந்தவிதமான கட்டணமும் இல்லை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இணையம் வழியாக அனைவரும் பார்க்கும் வண்ணமும் தேவைப்படும் போது பிரிண்ட் செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.
இணையத்தள முகவரி

Virus வந்த pen drive ஐ Format செய்வது எப்படி?


நாம் நமது Pen Drive ஐ Format செய்யும் போது நமக்கு சில சமயம் அது Format ஆவது இல்லை.  முக்கிய காரணமாக வைரஸ் தான் இருக்கக் கூடும். இதனை எப்படி சரி செய்வது என்றும், அதோடு ஒரு pen drive வாங்கினால் அதை எப்படி பாதுகாப்பது என்றும் தெரிந்து கொள்ளலாம்.


முதலில் format செய்யும் பிரச்சினையை சரி செய்வோம்.
உங்களால் உங்கள் pen drive ஐ நேரடியாக Format செய்ய இயலவில்லை எனில்


Right Click "My Computer"
-->Manage
--> Disk Management
--> Right Click your Pen drive
--> "Change Drive Letter And Paths"
Select ஆகி உள்ள letter ஐ  remove செய்யவும்.


இப்போது அதே இடத்தில உங்கள் pen drive மீது ரைட் கிளிக் செய்து format கொடுக்கவும்.
இப்போது Format ஆகிவிடும் பின்னர் மீண்டும் ரைட் கிளிக் செய்து அதற்க்கு லெட்டர் add செய்து விடவும், இல்லை என்றால் உங்கள் pen drive my computer இல் தெரியாது.


இந்த முறையில் format ஆகவில்லை என்றால் உங்கள் கம்ப்யூட்டர் அந்த pen drive ஐ format செய்யாது. வேறு கம்ப்யூட்டர் இல் முயற்சி செய்யவும்.

 


எப்படி pen drive ஐ பாதுகாப்பது??


1 . இன்று எல்லா pen drive களும் ஒரே தரத்தில் கிடைத்தாலும் நண்பர்களிடம் கேட்டு விட்டு அவர்கள் எத்தனை நாட்கள் பயன்படுத்தி உள்ளனர் என்பதை பொருத்து அதை முயற்சி செய்யலாம். (முழுவதுமாக நம்ப முடியாது )


2 . Browsing Center களில் பயன்படுத்த வேண்டாம்.


3 .  மூச்சுக்கு முன்னூறு முறை Format அடிக்காதீர்கள்.  தேவை இருப்பின் மட்டும் செய்யவும்.


4 . Pen drive வேறு யாரிடமாவது கொடுத்து இருந்தால் பின்னர் வாங்கும் போது ஸ்கேன் செய்து வைரஸ் இருந்தால் மட்டும் Format செய்யலாம்.


5 . டெல்லியில் Electronic பஜாரில் மட்டும் pen drive ஐ வாங்க வேண்டாம்.


6 . தண்ணீரில் விழுந்து விட்டால் தலைதெரித்து கம்ப்யூட்டர் இல் செருக வேண்டாம். அதை நன்றாக காயவைத்து மட்டும் தண்ணீர் போய்விட்டது என்று தெரிந்த பின் மட்டும் செருகவும்.


7 . Pen drive சொருகியவுடன் ஸ்கேன் செய்ய சிறந்த சாப்ட்வேர்


தரவிறக்க சுட்டி

வீடியோ காட்சிகளிலிருந்து குறித்த காட்சியை மட்டும் பெறுவதற்கு


வீடியோ கோப்பு ஒன்றில் கணத்திற்கு கணம் காட்சி மாறிக்கொண்டே இருக்கும். இந்த காட்சி மாற்றத்தின் இடையே குறித்த ஒரு காட்சியை மட்டும் பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு வழிமுறைகள் காணப்படுகின்றன.

அவற்றில் ஒன்றுதான் மென்பொருட்களை பயன்படுத்துதல் ஆகும்.

தற்போது இந்த வசதியை தரும் Video Snapshot Wizard எனும் மென்பொருளின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.

இம்மென்பொருளானது AVI, FLV, ASF, MOV, RM, RMVB, WMV, MKV, VOB, MPG, MPEG போன்ற பல்வேறு வீடியோ கோப்புக்களிலுள்ள காட்சிகளை தனியாக பெற்றுக்கொள்வதற்கு உதவியாக காணப்படுகின்றது.

மேலும் தனியாக பெறப்பட்ட காட்சிகளை BMP, JPG, GIF ஆகிய கோப்பு வகைகளாக சேமிக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

தரவிறக்க  சுட்டி

பேஸ்புக் தடை செய்யப்பட்டால் எப்படி பாவிப்பது ..?


பத்திரிக்கை செய்தி பாத்து பலரும் பதைபதைத்துபோனார்கள் ஏன் என் நண்பர்கள் பலரும் இதை தங்கள் பேஸ்புக் போஸ்டில் போட்டார்கள் இளைய சமுதயாமே கொந்தளித்த செய்தி  பேஸ்புக் சிறிலங்காவில்  சில வேளை தடை செய்யப்படலாம் என்பதே ..
இப்படி தடைப்பட்டா  என்ன செய்யல்லாம் என்று  பயப்பிடாதிங்க  எல்லா நாடுகளிலும் சில தளங்கள் தடை செய்யப்பட்டு இருப்பதும் தடை செய்யப்படுவதும் வழமை தான் சட்டம் தன் கடமையை செய்யும் :)

சரி அப்படி தடை பட்டா விட்டுட முடிமா ? எல்லாத்துக்கும் வளி இருக்குறது  hotspot என்ற  மென்பொருளை பயன் படுத்தி  தடை பட்ட எல்லா இணையத்தளங்களையும் பார்வை இட முடியும் . :)

தரவிறக்க  இத்தள  விளம்பரங்களில்  hotspot என்று உள்ளது தான் கிளிக் பண்ணி தரவிரக்குங்கள்  உதவியா இருக்கும்

தரவிறக்க  சுட்டி