Sunday, November 10, 2013

நிறுவப்பட்டு இருக்கும் மென்பொருள்களை வேறு Drive க்கு மாற்ற


SymMover , programs , installed , another drive
C Drive இல் இருந்து நேரடியாக வேறு Drive க்கு மாற்ற ஒரு வசதி இருந்தால் எப்படி அதுபற்றி தான் இந்த பதிவு   கணினியில் நிறைய மென்பொருள்களை பயன்படுத்தும் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை, C Drive – இல் மிக அதிகமான Software -களை இன்ஸ்டால் செய்துவிட்டு அது Full ஆனவுடன் என்ன செய்வது என்று திகைப்பது. இதனால் கணினி மெதுவாக இயங்க தொடங்கும். குறிப்பிட்ட Software – ஐ uninstall செய்துவிட்டு மீண்டும் வேறு டிரைவில் install செய்வார்கள் பலர். இம்மென்பொருள் மூலம் அந்த பிரச்சனையை தீர்க்க முடிகிறது .
 
இதை Windows Vista மற்றும் Windows 7 பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். முதலில் SymMover என்ற இலவச மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். எத்தனை மென்பொருட்களை Move செய்ய வேண்டுமோ அத்தனையையும் தெரிவு செய்து . ஒவ்வொன்றாகத்தான் மாற்ற முடியும்

புதிய Drive ல் மாற்றிய பின்ன எந்த மாற்றமும் இன்றி பயன்படுத்தலாம் என்பது சிறப்பம்சம்

தரவிறக்க சுட்டி

புதிய இலவச மென் பொருட்களை ஒரே இடத்தில் இருந்து நிறுவ


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6TccdLM4Kztk6rrdwzgxHyPPOBRZk3G_6PssAUiaCSSYHoT-hujD98hqflXJKUsdcpbaleylxvRikHzWqMLTI6ZykNbY3GY_InmaBnN_h-4k8aJNIaOkaVe6Wkf6IAnfykfNIfS_4qZiE/s320/%25E0%25AE%2587%25E0%25AE%25B2%25E0%25AE%25B5%25E0%25AE%259A.gif
சாதாரன இலவச மென்பொருள் தறவிரக்க விரும்பினால் கூகிளில்
சென்று தேடி ஒவ்வொரு மென்பொருளாகத்தான் தறவிரக்க வேண்டும்
ஆனால் நமக்கு பயன்படும் அனைத்து இலவச மென்பொருட்களையும்
அங்கீகாரத்துடன் ஒரே இடத்தில் இருந்து எளிதாக நம் கணினியில்
நிறுவலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

புதிதாக அறிமுகமாகிக்கொண்டிருக்கும் அனைத்து பீரிவேர் ( Freeware)
அப்ளிகேசன் பற்றிய தகவல்களும் , எத்தனை பேர் இந்தப்புதிய
மென்பொருளை பயன்படுத்தியுள்ளனர் எப்படி இருக்கிறது என்று
பயன்படுத்திய மக்களின் பின்னோட்டத்துடன் நாம் எளிதாக
அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இலவச மென்பொருட்களை கொடுக்க பல இணையதளம் இருந்தாலும்
சில நேரங்களில் இவ்வாறான தளங்களில் சென்று தறவிரக்கும் போது
Adware என்று சொல்லக்கூடிய தொல்லைகள் நம் கணினியில ஊடுறுவ வாய்ப்பிருக்கிறது. இதற்காக மென்பொருள் உருவாக்கும்
நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று தறவிரக்கலாம் அல்லது
இதே போல் நம்பிக்கையாக இருக்கும் தளத்தில் இருந்து இலவச
மென்பொருட்களை எளிதாக தேடி தறவிரக்கலாம். ஆனால் இந்தத்
தளத்தின் மூலம் நேரடியாக குறிப்பிட்ட மென்பொருள் உருவாக்கும்
இணையதளத்திற்கே இணைப்பு கொடுத்து நேரடியாக Install செய்யலாம்.

புதிதாக வெளிவரும் மென்பொருட்களையும் பழைய மென்பொருளின்
புதிய அப்டேசனை தறவிரக்க விரும்பும் அனைவருக்கும் இந்ததளம்
பயனுள்ளதாக இருக்கும்.

நமக்கு பிடித்த URL க்கு Quick Response Code உருவாக்குவது எப்படி ?


பல இடங்களில் நீங்கள் பாத்திருப்பிர்கள் இதனை எப்படி நம்முடைய இணையத்தளத்துக்கோ அல்லது  பேஸ்புக் கணக்குக்கோ உருவாக்கலாம்


 QR கோடு என்பது (Quick Response Code) , பார் கோடின் அடுத்த தலைமுறை என்றுதான் கூற வேண்டும். இந்த கோடானது மேட்ரிக்ஸ் பார்மெட்டில் உருவாக்கப்படுகிறது. இந்த QR கோட்டினை மேட்ரிக்ஸ் பார்கோடு என்றும் டு டைமன்ஸ்னல் பார்கோடு என்றும் கூறுவர். இந்த QR கோடு பெரும்பாலும் இணைய முகவரி, முகவரி, போன் நம்பர் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற்றை இந்த QR கோட்டில் செய்திகளை சுருக்கமாக உள்ளடத்து வைத்து பின் இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

QR கோடு ஸ்கேனர்கள் பெரும்பாலும் தற்போது ஸ்மார்ட் போன்களில் பரவலாக காணப்படுகிறது. விண்டோஸ் இயங்குதளத்திற்கும் QR கோடு ஸ்கேனர்கள் உள்ளது.

நம்முடைய வலைபூ, வலைமனை, முகவரி, தொலைபேசி எண் மற்றும் கூப்பன்களுக்கு எளிதாக QR கோடினை உருவாக்க முடியும். இதனை இணையத்தின் உதவியுடன் ஆன்லைனிலேயே உருவாக்க முடியும். 
இதை  உருவாக்க கூடிய  இணையத்தளங்கள் கீழே ...
இணையத்தளங்கள்

பயோடேட்டாவை உருவாக்க ஒரு இணையத்தளம்


இத்தளத்திற்கு சென்று  நாம் பயோடேட்டா உருவாக்க ஆரம்பிக்கலாம். நம் பெயர், முகவரி, கல்வித்தகுதி, தகுதிகள் என ஒவ்வொன்றாக கேட்டு வேலை செய்ய விரும்பும் துறைகள் வரை அனைத்தையும் கேட்ட பின் நம் பயோடேட்டாவை எப்படி கொடுத்தால் சிறப்பாக இருக்குமோ அப்படி கொடுக்கிறது. 
பல்வேறு வகையான பயோடேட்டாவின் மாடல்கள் இங்கு இருக்கிறது இதில் எது வேண்டுமோ அதை நாம் ஒரே சொடுக்கில் தேர்ந்த்தெடுத்துக் கொள்ள்லாம்.

மேலதிகாரிகளின் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என்று அழகாக வகைப்படுத்தி கண்ணால் பார்பதற்கு அழகாகவும் சிறப்பாகவும் பயோடேட்டா உருவாக்கி கொடுக்கிறது.

எந்தவிதமான கட்டணமும் இல்லை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இணையம் வழியாக அனைவரும் பார்க்கும் வண்ணமும் தேவைப்படும் போது பிரிண்ட் செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.
இணையத்தள முகவரி

Virus வந்த pen drive ஐ Format செய்வது எப்படி?


நாம் நமது Pen Drive ஐ Format செய்யும் போது நமக்கு சில சமயம் அது Format ஆவது இல்லை.  முக்கிய காரணமாக வைரஸ் தான் இருக்கக் கூடும். இதனை எப்படி சரி செய்வது என்றும், அதோடு ஒரு pen drive வாங்கினால் அதை எப்படி பாதுகாப்பது என்றும் தெரிந்து கொள்ளலாம்.


முதலில் format செய்யும் பிரச்சினையை சரி செய்வோம்.
உங்களால் உங்கள் pen drive ஐ நேரடியாக Format செய்ய இயலவில்லை எனில்


Right Click "My Computer"
-->Manage
--> Disk Management
--> Right Click your Pen drive
--> "Change Drive Letter And Paths"
Select ஆகி உள்ள letter ஐ  remove செய்யவும்.


இப்போது அதே இடத்தில உங்கள் pen drive மீது ரைட் கிளிக் செய்து format கொடுக்கவும்.
இப்போது Format ஆகிவிடும் பின்னர் மீண்டும் ரைட் கிளிக் செய்து அதற்க்கு லெட்டர் add செய்து விடவும், இல்லை என்றால் உங்கள் pen drive my computer இல் தெரியாது.


இந்த முறையில் format ஆகவில்லை என்றால் உங்கள் கம்ப்யூட்டர் அந்த pen drive ஐ format செய்யாது. வேறு கம்ப்யூட்டர் இல் முயற்சி செய்யவும்.

 


எப்படி pen drive ஐ பாதுகாப்பது??


1 . இன்று எல்லா pen drive களும் ஒரே தரத்தில் கிடைத்தாலும் நண்பர்களிடம் கேட்டு விட்டு அவர்கள் எத்தனை நாட்கள் பயன்படுத்தி உள்ளனர் என்பதை பொருத்து அதை முயற்சி செய்யலாம். (முழுவதுமாக நம்ப முடியாது )


2 . Browsing Center களில் பயன்படுத்த வேண்டாம்.


3 .  மூச்சுக்கு முன்னூறு முறை Format அடிக்காதீர்கள்.  தேவை இருப்பின் மட்டும் செய்யவும்.


4 . Pen drive வேறு யாரிடமாவது கொடுத்து இருந்தால் பின்னர் வாங்கும் போது ஸ்கேன் செய்து வைரஸ் இருந்தால் மட்டும் Format செய்யலாம்.


5 . டெல்லியில் Electronic பஜாரில் மட்டும் pen drive ஐ வாங்க வேண்டாம்.


6 . தண்ணீரில் விழுந்து விட்டால் தலைதெரித்து கம்ப்யூட்டர் இல் செருக வேண்டாம். அதை நன்றாக காயவைத்து மட்டும் தண்ணீர் போய்விட்டது என்று தெரிந்த பின் மட்டும் செருகவும்.


7 . Pen drive சொருகியவுடன் ஸ்கேன் செய்ய சிறந்த சாப்ட்வேர்


தரவிறக்க சுட்டி

வீடியோ காட்சிகளிலிருந்து குறித்த காட்சியை மட்டும் பெறுவதற்கு


வீடியோ கோப்பு ஒன்றில் கணத்திற்கு கணம் காட்சி மாறிக்கொண்டே இருக்கும். இந்த காட்சி மாற்றத்தின் இடையே குறித்த ஒரு காட்சியை மட்டும் பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு வழிமுறைகள் காணப்படுகின்றன.

அவற்றில் ஒன்றுதான் மென்பொருட்களை பயன்படுத்துதல் ஆகும்.

தற்போது இந்த வசதியை தரும் Video Snapshot Wizard எனும் மென்பொருளின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.

இம்மென்பொருளானது AVI, FLV, ASF, MOV, RM, RMVB, WMV, MKV, VOB, MPG, MPEG போன்ற பல்வேறு வீடியோ கோப்புக்களிலுள்ள காட்சிகளை தனியாக பெற்றுக்கொள்வதற்கு உதவியாக காணப்படுகின்றது.

மேலும் தனியாக பெறப்பட்ட காட்சிகளை BMP, JPG, GIF ஆகிய கோப்பு வகைகளாக சேமிக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

தரவிறக்க  சுட்டி

பேஸ்புக் தடை செய்யப்பட்டால் எப்படி பாவிப்பது ..?


பத்திரிக்கை செய்தி பாத்து பலரும் பதைபதைத்துபோனார்கள் ஏன் என் நண்பர்கள் பலரும் இதை தங்கள் பேஸ்புக் போஸ்டில் போட்டார்கள் இளைய சமுதயாமே கொந்தளித்த செய்தி  பேஸ்புக் சிறிலங்காவில்  சில வேளை தடை செய்யப்படலாம் என்பதே ..
இப்படி தடைப்பட்டா  என்ன செய்யல்லாம் என்று  பயப்பிடாதிங்க  எல்லா நாடுகளிலும் சில தளங்கள் தடை செய்யப்பட்டு இருப்பதும் தடை செய்யப்படுவதும் வழமை தான் சட்டம் தன் கடமையை செய்யும் :)

சரி அப்படி தடை பட்டா விட்டுட முடிமா ? எல்லாத்துக்கும் வளி இருக்குறது  hotspot என்ற  மென்பொருளை பயன் படுத்தி  தடை பட்ட எல்லா இணையத்தளங்களையும் பார்வை இட முடியும் . :)

தரவிறக்க  இத்தள  விளம்பரங்களில்  hotspot என்று உள்ளது தான் கிளிக் பண்ணி தரவிரக்குங்கள்  உதவியா இருக்கும்

தரவிறக்க  சுட்டி 

PDF கோப்புக்களுக்கு Watermark வைக்க


சொந்தமாக உருவாக்கப்படும் படைப்புக்களை உரிமை கோருவதற்காக வாட்டர்மார்க் பயன்படுத்துவது வழமையாகும்.
இவ்வாறு உருவாக்கப்படும் PDF  கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைப்பதற்கு PDF Watermark Creator எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இலகுவாகவும், விரைவாகவும் செயற்படக்கூடியதாகக் காணப்படும் இம்மென்பொருளின் மூலம் எழுத்துக்களைக் கொண்டோ அல்லது லோகோவைப் பயன்படுத்தியோ வாட்டர்மார்க்கினை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
தரவிறக்கச் சுட்டி  
 

மென்பொருள் Serial, Keygen இலகுவாக பெறுவது எப்படி ?


இது கொஞ்சம் வித்தியாசமான பதிவு தான். எப்படி திருடுவது என்பது  விலை உயந்த மென்பொருட்களை எப்படி இலவசமாக பயன்படுத்தலாம் .சட்டரீதியாக மென்பொருட்களை எவரும் பணம் கொடுத்து வாங்குவது கிடையாது. காரணம் இணையத்தில் பரவிகிடக்கின்ற திருட்டுகள். இலகுவாக எந்த மென்பொருளுக்கும் உரிய Activation Key இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்த செயற்பாடு சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளபடாதவை, இருந்தும் இதை தடுக்க எந்தவொரு வழியும் தற்சமயம் கிடையாது. என்ன செய்வது நானும் இந்த முறையைத்தான் பின்பற்றி ஒரு திருட்டு வழி முறையை கற்றுத்தர போகிறேன்

  •     முதலாவதாக கூகிள் இணையதளத்திற்கு செல்லுங்கள் - Google.com
  •     பின்னர் கூகிள் தேடலில் “94fbr” இடைவெளிவிட்டு மென்பொருள்  பெயரை எழுதுங்கள். உதாரணமாக 94fbr windows 8
  •     அதன் பிறகு கூகிள் keygen’s உரிய பட்டியலை காட்டும்.
அவ்வளவு தான் இனி எல்லாமே இலவசம் நீங்க விரும்பியதை தரவிறக்கி  கொள்ளலாம் ...

usb யை format பண்ண 3 வழிகள்


3 way to format usb , jaffnapcPen Drive  ஆனது "Data"வினை சேமித்து வைக்கவும் அதை இன்னும் ஒரு இடத்திற்கு கொண்டு செல்லவும் உதவும்.

இந்த Pen Drive இல் 4GB இற்கு மேலே Copy பன்னிக்கொள்ள முடியாது என்பது பற்றி உங்களுக்கு தொரியுமா?

உங்களிடம் 4GB இற்கு மேற்பட்ட ஒரு Pen Drive இருந்தால்,அதில் 4GB இற்கு மே்ற்பட்ட ஒரு  தனியான பைலை  கொப்பி செய்து பாருங்கள்  "File Too Large" என்ற செய்தி தோன்றும்.. ஏன் என்றால்Pen Drive&nbsp இனை Format  செய்யும்  போது Default ஆகவே FAT32 என்ற File System இல் பண்ணிவிடும்.இதில் தனியான ஒரு File Size இன் அளவு 4GB ஆக வரையருக்கப்பட்டு காணப்படுகிறது. இதனால்தான் Copy பன்ன முடியாமல் இருக்கிறது. அப்படி என்றால் 4GB இற்கு மேற்பட்ட எந்தவொரு தனி பைலையும் கொப்பி பண்ணிக் கொள்ள முடியாதா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்து இருக்கலாம்.இதை (FAT32) NTFS இற்கு மாற்றினால் மட்டுமே.கொப்பி பண்ணிக் கொள்ள முடியும்.

முறை 01

இது அனைவருக்கும் தெரிந்த முறை தான், இந்த முறையில் Format பண்ணுவதன் மூலம்  உங்களுடய பழைய பைலை இழக்க நேரிடும் என்பதை மறந்து விடாதீர்கள். Pen Drive மீது Right Click செய்து >> Format >> File System என்பதில் NTFS கொடுத்து Format பண்ணுங்கள்.

முறை 02

இந்த முறை முலம் செய்தால் உங்களுடைய பழைய பைல் அப்படியே இருக்க மாற்றித் தரும்.

RUN இற்கு சென்று (Windows key மற்றும் R ஆகிய key-களை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் பெற முடியும்) CMD என டைப் செய்து OK பண்ணுங்கள்.

பின் , Convert I: /FS:NTFS என டைப் செய்து enter பண்ணுங்கள். (இங்கு I என்பது உங்கள் Pen Drive இன் ஆங்கில எழுத்தினை குறிக்கும்) சிறிது நேரத்தில் மாறிவிடும்.
இந்த 2 முறையும் உங்களுக்கு வெற்றியளிக்கவில்லையா?

 03வது முறை

RUN இல் CMD என டைப் செய்து OK பண்ணுங்கள். பின் chkdsk g: /f என டைப் செய்து என்டா் பண்ணுங்கள். (இங்கு g என்பது உங்கள் Pen Drive இன் ஆங்கில எழுத்தினை குறிக்கும்)
அடுத்து 2-வது முறையை பின்பற்றுங்கள் நிச்சயமாக NTFS இற்கு மாறிவிடும். 

Saturday, November 9, 2013

கோப்புகளை வேகமாக பிரதியெடுக்க மூன்று இலவச மென்பொருள்கள்....


நமது கோப்புகளை நகலாக்கி சேமிக்க விண்டோசில் கோடா நிலையில் உள்ள Ctrl + C மற்றும் Ctrl + V பயன்படுத்துவோம்.இது நமது கணினியில் உள்ள கோப்புகளை பிரதி எடுக்க உதவுகின்றது.இதுவே பிணையத்தில் உள்ள மற்ற கணினிகளில் இருந்து பிரதி எடுக்கும்போது மிகவும் மந்தமாக செயல்படும்.இதனை தவிர்க்க உதவும் மூன்று இலவச மென்பொருள்களை பற்றி ...
1 .FastCopy : 
இதனை தரவிறக்க இங்கே சொடுக்கவும்.. Download FastCopy 
2.Microsoft RichCopy :
இதனை தரவிறக்க இங்கே சொடுக்கவும்.. Download Microsoft RichCopy

3.TeraCopy :
இதனை தரவிறக்க இங்கே சொடுக்கவும்...Download TeraCopy

உலகில் நீங்கள் எத்தனையாவது நபர் என அறிய வேண்டுமா?


உலக மக்கள் தொகை வெற்றிகரமாக 700 கோடியை எட்டி விட்டது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாம். பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்தை தடுக்க  மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா.,வின் மக்கள் தொகை நிதியமைப்பு, ஒரு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது. அந்த இணையதளத்தில் நீங்கள் நுழைந்து, உங்கள் வயது,உங்கள் வயது, பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், தற்போதைய முகவரி போன்ற தகவல்களை கொடுத்தால் அடுத்த வினாடியில் உலகில் நீங்கள் எத்தனைவது நபர் என்ற எண்ணிக்கை கிடைக்கும். ஐ.நா.,வின் மக்கள் தொகை பிரிவு, மக்கள் தொகை நிதியமைப்பு, க்ளோபல் பூட்பிரின்ட் உள்ளிட்ட ஐ,நா.,வின் பிற அமைப்புகள் வழங்கும் தரவுகளின் அடிப்படையில் இந்த நம்பர் உங்களுக்கு வழங்கப்படும்.
முதலில் கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லுங்கள். உங்களுக்கு அந்த தளம் ஓபன் ஆகும் அதில் தற்போதைய மக்கள் தொகை எண் இருக்கும். (அதை கவனியுங்கள் ஒவ்வொரு நொடிக்கும் 5 முதல் 10 அதிகமாகி கொண்டே இருக்கும். அவ்வளவு வேகத்தில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டு உள்ளது) அதில் உள்ள Get Started என்ற பட்டனை அழுத்தவும். 
Get Started என்ற பட்டனை கிளிக் செய்தவுடன் இன்று விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்கள் விவரங்களை பூர்த்தி செய்யவும். விவரங்களை பூர்த்தி செய்த பிறகு கீழே உள்ள Proceed என்ற பட்டனை அழுத்தினால் அடுத்த வினாடி உங்களுக்கு முன்னாடி உலகில் எத்தனை பேர் பிறந்து உள்ளார்கள் என காட்டும்.  மற்றும் உங்களுக்கு முன்னர் பிறந்தவர்களின் எண்ணிக்கை கண்டங்களின் அடிப்படையில் பிரித்து காட்டும்.

இந்த தளத்திற்கு செல்ல -www.7billionandme.org

Wednesday, October 30, 2013

வைரஸ் தாக்கிவிட்டதா பென்டிரைவை?


  
இன்று கம்பியூட்டர் வைத்திருக்கும் அனைவரிடமும் இருப்பது பென்டிரைவ் என்ற ஒரு பொருள் தான் தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணினியில் பென்டிரைவைஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கியமான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போமா நண்பரே இதோ அந்த தகவல் உங்களுக்காக...
முதலில் பென்டிரைவை உங்கள் கணிணியில் சொருகி கொள்ளுங்கள்.
அதன் பிறகு Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.
இப்பொழுது பென்ட்ரைவ் எந்த டிரைவில் உள்ளது எனப்பாருங்கள். My Computer செல்வதன் மூலம் இதை கண்டறியலாம்.
உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.
இப்போது Enter அழுத்துங்கள்.சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

ஆண்ட்ராய்டில் பேக் அப் செய்ய ...!


                               
இன்று பெரும்பாலான மக்கள் அதிகம் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஸ்மார்ட்போன்களில் விண்டோஸ் ஓஎஸ், ஆப்பிள் ஐஓஎஸ், பிளாக்பெர்ரி ஓஎஸ் என பல மொபைல் ஓஎஸ்களில் ஸ்மார்ட்போன்கள் வந்தாலும் ஆன்டிராய்ட் போன்களை தான் பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். இன்று உலகில் உள்ள ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் மக்கள் தொகையில் 80 சதவீத மக்கள் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களையே பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போன்களில் புதிதாக ஓஎஸ் அப்டேட் செய்யும் பொழுது டேட்டாவை பேக் அப் எடுத்து வைப்பது மிகவும் முக்கியம். ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களில் பேக் அப் எடுப்பது எப்படி என்ற தகவலை கீழே பார்ப்போம்.
               
கூகுளின் சேவைகள் மூலம் ஆன்டிராய்ட் போன்களில் டேட்டாவை பேக் அப் எடுத்து வைக்கலாம். முதலில் செட்டிங்ஸ்க்கு சென்று backup & reset ஆப்ஷனுக்கு போக வேண்டும்.
              
backup & reset ஆப்ஷனுக்கு போன பின் "Backup My Data" and "Automatic Restore." என்பதை செலக்ட் செய்ய வேண்டும்.
              
பின்பு உங்களுது எந்த கூகுள் அக்கவுன்டில் நீங்கள் டேட்டாவை பேக் அப் எடுத்து வைக்க உள்ளீர்களோ அந்த அக்கவுன்ட் மூலம் சிங்கிரனைஸ் செய்ய வேண்டும். நீங்கள் கம்பியூட்டரிலோ அல்லது வேறு எதாவது சாதனங்களிலோ பேக் அப் எடுத்து வைப்பதை விட கூகுள் சேவைகளில் பேக் அப் எடுத்து வைப்பது பாதுகாப்பானதாகும்.
              
கூகுள் சேவைகளில் பேக் அப் எடுத்து வைப்பது உங்களுக்கு சரியாக இல்லையென்றால் மேலும் வசதியாக நீங்கள் My backup pro என்ற அப்ளிகேஷனை பயன்படுத்தி நீங்கள் டேட்டாவா பேக் அப் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
             
எஸ்எம்எஸ்களை பேக் அப் எடுத்த வைக்க sms backup என்ற இலவச அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்தலாம்.






Saturday, October 19, 2013

பேப்ளேட்(Phablet) என்றால் என்ன?



திரை அளவு 5 முதல் 7 இன்ச் வரை உள்ள ஸ்மார்ட் போன்களே பேப்ளேட்(Phablet) என அழைக்கப்படுகின்றன. இது ஸ்மார்ட் போன்(Smart Phone) மற்றும் டேப்லெட்ன்(Tablet) அனைத்து சிறப்புகளையும் கொண்டது. அதாவது ஸ்மார்ட், டேப்லெட் என இரண்டு வெவ்வேறு வகையான சாதனங்களை உபயோகிப்பதை தவிர்க்கவே வந்ததுதான் பேப்ளேட்.

இனி நீங்கள் வாங்கப்போவது பேப்ளேட் தானே??!!

யூடியுப் விளம்பரங்களை தடை செய்ய


          
யூடியுப்பில்(youtube) வீடியோ ஓடும் போது குறுக்கே வரும் விளம்பரங்கள் இடையூறு செய்கின்றதா? கூகிள் குரோம் பிரவுசர் உபயோகிப்பவரா நீங்கள்?குரோம் பிரவுசர்கென ஒரு யெக்டென்ஸன்(extension) உள்ளது. அதுதான் ஆட்பிளாக் பிளஸ்(Adblock plus). இதை கூகிள் குரோம் பிரவுசரில் இன்ஸ்டால் செய்தால் போதுமானது..இதுவே வீடியோ ஓடும் போது வரும் விளம்பரங்களை தடுத்துவிடும். விளம்பர தொந்தரவின்றி வீடியோ பார்க்கலாம்..